Google Formsஸைப் பயன்படுத்தி பெரிய மற்றும் சிறிய அளவிலான தகவலைச் சேகரித்து ஒழுங்குபடுத்தலாம். அதுவும் இலவசமாகவே.
Google Formsஸுக்குச் செல்லவும் Google Formsஸைப் பதிவிறக்கவும்குழுக்களுக்கான கூடுதல் பாதுகாப்புடனும் கட்டுப்பாட்டுடனும் கூடிய நீங்கள் விரும்பும் Google Forms.
மேலும் அறிகஅடுத்த சுற்றுலாவைத் திட்டமிடலாம், நிகழ்வு முன்பதிவுகளை நிர்வகிக்கலாம், விரைவாக கருத்துக்கணிப்பை உருவாக்கலாம், செய்திமடலுக்கான மின்னஞ்சல் முகவரிகளைச் சேகரிக்கலாம், வினாடி வினாவை உருவாக்கலாம், மேலும் பலவற்றைச் செய்யலாம்.
உங்கள் சொந்தப் படம் அல்லது லோகோவைப் பயன்படுத்தலாம் மற்றும் உங்கள் சொந்தத் தனிப்பட்ட படிவத்தைப் பூர்த்தி செய்ய சரியான வண்ணங்களை படிவங்கள் தேர்ந்தெடுக்கும் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட தீம்களின் தொகுப்பிலிருந்து உங்கள் படிவத்தின் நோக்கத்தினைப் பிரதிபலிக்கும் தீமினைத் தேர்வுசெய்யலாம்.
பல பதில்களில் இருந்து தேர்ந்தெடுத்தல், கீழ்த்தோன்றும் பதில்களில் இருந்து தேர்ந்தெடுத்தல், நேர்க்கோட்டு அளவுகோல் மூலம் பதிலளித்தல் போன்ற பலவகையான கேள்வி பதில் முறைகளில் இருந்து நீங்கள் விரும்புவதைத் தேர்வுசெய்து கொள்ளலாம். படங்களையும் YouTube வீடியோக்களையும் சேர்க்கலாம் அல்லது பக்கமாகப் பிரித்தல், கேள்விகளைத் தவிர்க்கும் அம்சம் ஆகியவற்றின் மூலம் புதுமையான படிவத்தை உருவாக்கலாம்.
படிவங்கள் மாற்றங்களை உடனடியாகச் செயல்படுத்தும், எனவே பெரிய மற்றும் சிறிய திரைகளில் படிவங்களை எளிதாக (மற்றும் அழகாக) உருவாக்கலாம், திருத்தலாம் மற்றும் பதிலளிக்கலாம்.
படிவங்களில் உங்கள் கருத்துக்கணிப்புகளுக்கான பதில்கள், பதில் குறித்த நிகழ்நேர தகவல் மற்றும் விளக்கப்படங்களுடன் தானாகவே, நேர்த்தியாக சேகரிக்கப்படுகின்றன. அல்லது எல்லாவற்றையும் காண்பிக்கும் வகையில் உங்கள் தரவை விரிதாளில் பார்க்கலாம்.
உங்களின் முதல் கருத்துக்கணிப்பை உருவாக்கத் தயாரா? Google படிவங்களைப் பயன்படுத்தி இலவசமாகவும் எளிதாகவும் உருவாக்கலாம்.
Google படிவங்களுக்குச் செல்