Google Sheets மூலம் தரவின் அடிப்படையில் முடிவெடுங்கள்
எந்தச் சாதனத்தில் இருந்தும் நிகழ்நேரத்தில் ஆன்லைன் விரிதாள்களை உருவாக்கலாம், அவற்றில் பிறருடன் இணைந்து பணியாற்றலாம்.
எங்கிருந்தபடியும் தரவில் இணைந்து பணியாற்றுங்கள்
எளிதான பகிர்தல் மற்றும் நிகழ்நேரத் திருத்துதல் அம்சங்களின் மூலம் உங்கள் ஆன்லைன் விரிதாளில் இருக்கும் தரவுக்கான ஒப்பீட்டுச் சரிபார்த்தலை நிறுவலாம். இதன் மூலம் தரவின் நம்பகத்தன்மையை வெளிக்காட்ட முடியும். பகுப்பாய்வைத் தொடர்ந்து மேற்கொள்ள பணிகளை ஒதுக்கலாம், கருத்துகளைப் பயன்படுத்தலாம்.
உள்ளடங்கிய நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மூலம் புள்ளிவிவரங்களை வேகமாக அணுகுங்கள்
ஸ்மார்ட் ஃபில், சூத்திரப் பரிந்துரைகள் போன்ற உதவிகரமான அம்சங்கள் வேகமாகவும் குறைவான பிழைகளோடும் பகுப்பாய்வு செய்ய உதவுகின்றன. மேலும், எளிதான மொழியில் உங்கள் தரவைப் பற்றிக் கேள்விகள் கேட்பதன் மூலம் புள்ளிவிவரங்களை வேகமாகப் பெறலாம்.
பிற Google ஆப்ஸுடன் தடங்கலின்றி இணையுங்கள்
உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் உங்கள் விருப்பத்திற்குரிய பிற Google ஆப்ஸுடன் Sheets இணைக்கப்பட்டுள்ளது. Google Forms தரவை Sheets மூலம் எளிதாகப் பகுப்பாய்வு செய்யலாம் அல்லது Sheets விளக்கப்படங்களை Google Slidesஸிலும் Docsஸிலும் உட்பொதித்துப் பயன்படுத்தலாம். மேலும், கருத்துகளுக்கு நேரடியாக Gmailலில் இருந்தே பதில் அளிக்கலாம், Google Meetடில் ஸ்கிரீனைப் பகிர்தல் அம்சத்தின் மூலம் உங்கள் விரிதாள்களை எளிதாகப் பகிரலாம்.
கூட்டுப்பணி செய்வதற்கான அம்சத்தையும் நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தையும் Excel ஃபைல்களிலும் பயன்படுத்துங்கள்
Microsoft Excel விரிதாள்களின் வடிவத்தை மாற்றாமலேயே ஆன்லைனில் அவற்றை எளிதாகத் திருத்தலாம். அத்துடன் கருத்துகள், பணிகள், ஸ்மார்ட் ஃபில் போன்ற Sheetsஸின் மேம்பட்ட கூட்டுப்பணி செய்வதற்கான & உதவிகரமான அம்சங்களையும் பயன்படுத்தலாம்.
பிரத்தியேகமான தீர்வுகளை உருவாக்குங்கள்
பிசினஸ் ஆப்ஸையும் தன்னியக்கங்களையும் உருவாக்கி, வேலையை விரைவாகச் செய்யலாம். குறியீட்டை எழுத வேண்டிய தேவையில்லாமலே Sheets உடன் பிரத்தியேக ஆப்ஸை உருவாக்க AppSheetடைப் பயன்படுத்தலாம். அல்லது, ஆப்ஸ் ஸ்கிரிப்ட்டைப் பயன்படுத்தி பிரத்தியேகச் செயல்பாடுகள், மெனு விருப்பங்கள், மேக்ரோக்கள் ஆகியவற்றைச் சேர்க்கலாம்.
பணிகளை எப்போதும் சமீபத்திய தரவின் அடிப்படையில் மேற்கொள்ளுங்கள்
Sheetsஸைப் பயன்படுத்துவதால் அனைவரும் எப்போதுமே விரிதாளின் சமீபத்திய பதிப்பில் வேலை செய்யலாம். அத்துடன், செய்யப்படும் திருத்தங்கள் தானாகவே இதுவரையான பதிப்புகளில் சேமிக்கப்படுவதால் அவற்றை எளிதில் செயல்தவிர்க்கலாம் அல்லது தனி ஒரு விரிதாள் கலத்தில் மேற்கொண்ட இதுவரையான திருத்தங்களைக்கூட பார்க்கலாம்.
முக்கியமான தரவுடன் தடங்கலின்றி இணையுங்கள்
நீங்கள் பயன்படுத்தும் பிற கருவிகளில் இருந்து தரவைப் பெற்று அவற்றைப் பகுப்பாய்வு செய்யலாம். உதாரணமாக, Salesforceஸிலிருந்து பெறும் வாடிக்கையாளர் தரவு. Sheetsஸின் லட்சக்கணக்கான வரிசைகளில் உள்ள BigQuery தரவை எந்தவொரு குறியீட்டையும் எழுதாமலே இணைக்கப்பட்ட தாள்களைப் பயன்படுத்தியும் நிறுவன வாடிக்கையாளர்கள் பகுப்பாய்வு செய்யலாம்.
பாதுகாப்பு, இணக்கத்தன்மை மற்றும் தனியுரிமை
இயல்பாகவே பாதுகாப்பானது
உங்கள் தரவைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக மேம்பட்ட மால்வேர் பாதுகாப்பு முறைகள் உட்பட தொழில்துறையில் சிறந்து விளங்கும் பாதுகாப்பு முறைகளை நாங்கள் பயன்படுத்துகிறோம். Sheets என்பது கிளவுட் சார்ந்ததாகும். எனவே ஃபைல்களைச் சாதனங்களில் சேமிக்கத் தேவையில்லை, இதனால் சாதனங்களுக்கு ஏற்படும் ஆபத்தும் குறைவாகவே இருக்கும்.
அனுப்பப்படும்போதும் சாதனத்திலேயே இருக்கும்போதும் தரவு என்கிரிப்ஷன் செய்யப்படுகிறது
Google Driveவில் பதிவேற்றப்படுகின்ற அல்லது Sheetsஸில் உருவாக்கப்படுகின்ற ஃபைல்கள் அனைத்தும் அனுப்பப்படும்போதும் சாதனத்திலேயே இருக்கும்போதும் என்க்ரிப்ஷன் செய்யப்படுகின்றன.
ஒழுங்குமுறைத் தேவைகளைப் பின்பற்றுவதற்கான இணக்கத்தன்மை
Sheets உட்பட எங்கள் தயாரிப்புகளின் பாதுகாப்பு, தனியுரிமை, இணக்கக் கட்டுப்பாடுகள் ஆகியவை தனிப்பட்ட முறையில் அவ்வப்போது சரிபார்க்கப்படுகின்றன.
தனியுரிமைக்கென வடிவமைக்கப்பட்டது
Google Cloudன் மற்ற நிறுவனச் சேவைகள் கடைப்பிடிக்கும் அதே கடுமையான தனியுரிமை உறுதிப்பாடுகளையும் தரவுப் பாதுகாப்புகளையும் Sheets கடைப்பிடிக்கிறது.
உங்கள் தரவிற்கான கட்டுப்பாடு உங்களிடமே இருக்கும்.
Sheets உள்ளடக்கத்தை ஒருபோதும் நாங்கள் விளம்பர நோக்கங்களுக்காகப் பயன்படுத்த மாட்டோம்.
உங்கள் தனிப்பட்ட தகவல்களை ஒருபோதும் மூன்றாம் தரப்புகளுக்கு விற்க மாட்டோம்.
உங்களுக்கு ஏற்ற திட்டத்தைக் கண்டறியுங்கள்
Google Sheets என்பது Google Workspaceஸின் ஒரு பகுதியாகும்
ஒவ்வொரு திட்டத்திலும் அடங்குபவை
தனிப்பட்ட உபயோகத்திற்கு (கட்டணமில்லை) |
Business Standard$12 USD
பயனர் ஒருவருக்கு மாதத்திற்கு. 1 வருடம்
தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் அல்லது மாதாந்திர பில்லிங் என்றால் பயனர் ஒருவருக்கு மாதத்திற்கு $14.40 |
|
---|---|---|
Docs, Sheets, Slides, Forms
உள்ளடக்க உருவாக்கம் |
||
Drive
பாதுகாப்பான கிளவுட் சேமிப்பகம் |
ஒரு பயனருக்கு 15 ஜி.பை. |
ஒரு பயனருக்கு 2 டெ.பை. |
உங்கள் குழுவிற்கான பகிர்ந்த இயக்ககங்கள் |
||
Gmail
பாதுகாப்பான மின்னஞ்சல் |
||
பிசினஸிற்கான பிரத்தியேக மின்னஞ்சல் முகவரி |
||
Meet
வீடியோ & குரல் கான்ஃபிரன்ஸிங் |
100 பங்கேற்பாளர்கள் |
150 பங்கேற்பாளர்கள் |
மீட்டிங் ரெக்கார்டிங்குகள் Driveவில் சேமிக்கப்பட்டன |
||
நிர்வாகி
மையப்படுத்தப்பட்ட நிர்வாகம் |
||
குழு அடிப்படையிலான பாதுகாப்புக் கொள்கைக் கட்டுப்பாடுகள் |
||
வாடிக்கையாளர் உதவி சேவைகள் |
சுயமாக உதவி பெறுவதற்கான ஆன்லைன் மற்றும் சமூக மன்றங்கள் |
24/7 ஆன்லைன் உதவி மற்றும் சமூக மன்றங்கள் |
எங்கிருந்தும் எந்தச் சாதனத்தில் இருந்தும் கூட்டுப்பணி செய்யுங்கள்
மொபைல், டேப்லெட், கம்ப்யூட்டர் போன்ற எதிலிருந்து வேண்டுமானாலும் எங்கிருந்தும் உங்கள் விரிதாள்களை (ஆஃப்லைனில் இருந்தால்கூட) அணுகலாம் உருவாக்கலாம் திருத்தலாம்.
டெம்ப்ளேட்களுடன் பயன்படுத்தத் தொடங்குங்கள்
வேலையை விரைந்து தொடங்க பல்வேறு டாஷ்போர்டுகள், திட்டப்பணிக்கான டிராக்கர்கள் மற்றும் தொழில்முறை ரீதியில் வடிவமைக்கப்பட்ட டெம்ப்ளேட்டுகளில் இருந்து ஒன்றைத் தேர்வுசெய்யலாம்.
மேலும் டெம்ப்ளேட்களுக்கு Sheets டெம்ப்ளேட் கேலரிக்குச் செல்லுங்கள்.