Google Drive மூலம் குழுவுடன் கூட்டுப்பணியாற்றுவதையும் உற்பத்தித்திறனையும் அதிகரித்தல்

குழு முழுவதிலும் Drive எவ்வாறு பணியைத் துரிதப்படுத்துகிறது என்பதைப் பார்க்க வீடியோவைப் பாருங்கள்

ஐகான்

கிளவுட்-சார்ந்த கூட்டுப்பணியாற்றும் ஆப்ஸ் அடங்கும்

Docs

உங்கள் நிறுவனத்தைச் சாராத குழுவினர்களுடனோ தனிநபர்களுடனோ ஆவணத்தில் கூட்டுப்பணியாற்றலாம், சிங்கிள் சோர்ஸ் ஆஃப் ட்ரூத்தில் சீரமைக்கலாம். கருத்துகள், பணிகள் ஆகியவற்றின் மூலம் உங்கள் உள்ளடக்கம் பற்றித் தொடர்புகொள்ளலாம்.

Sheets

தரவின் அடிப்படையில் தீர்மானம் மேற்கொள்வதை அனைவருக்கும் எளிதாக்கிடுங்கள். விரிதாள்களைப் பயன்படுத்தி தரவை ஆய்வு செய்து, காட்சிப்படுத்தி, பகிர்ந்து ஒரு குழுவாகச் சரியான முடிவுகளைத் தீர்மானியுங்கள்.

Slides

துல்லியமான விளக்கக்காட்சிகளைப் பயன்படுத்தி உங்களின் சிறப்பான பணியை வெளிப்படுத்துங்கள். புதிய பதிப்பில் உங்கள் குழுவுடன் சேர்ந்து ஒன்றாகப் பணிபுரிந்து டெம்ப்ளேட்டுகளையும் பரிந்துரைகளையும் பயன்படுத்தி விளக்கக்காட்சிகளை எளிதாக உருவாக்கலாம் திருத்தலாம்.

பேனர்
ஐகான்

ஏற்கெனவே உள்ள உங்கள் கருவிகளுடன் ஒருங்கிணைத்தல்

Microsoft Office

கோப்பின் வடிவங்களை மாற்றாமலேயே Microsoft Office கோப்புகளில் உங்கள் குழுவுடன் கூட்டுப்பணியாற்றலாம். Microsoft Office கோப்புகளுக்கான நிகழ்நேரப் பங்கேற்பின் மூலம் பதிப்புக் கட்டுப்பாட்டுச் சிக்கல்களைப் பற்றிய கவலையில்லாமல் குழுவிலுள்ள பல உறுப்பினர்கள் ஒரே கோப்பில் பணியாற்றலாம்.

பிற கருவிகள்

உங்கள் குழு பயன்படுத்தக்கூடிய பல்வேறு வகையான கூடுதல் கருவிகள் & ஆப்ஸுடன் ஒருங்கிணைப்பையும் Drive ஆதரிக்கிறது. இதில் Adobe, Atlassian, Docusign, Salesforce, Slack போன்ற பல கருவிகள் அடங்கும்.

100க்கும் மேற்பட்ட கோப்பு வகைகள்

Docs, Sheets, Slides, Microsoft Officeஸுடன் கூடுதலாக, PDFகள், CAD கோப்புகள், படங்கள், வீடியோக்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய 100க்கும் மேற்பட்ட கோப்பு வகைகளை Drive ஆதரிக்கிறது.

பேனர்
ஐகான்

இயக்குவது Googleளின் AI மற்றும் Search தொழில்நுட்பம்

ஒவ்வொரு நாளும் நீங்கள் பயன்படுத்தும் அதே சக்திவாய்ந்த மற்றும் துல்லியமான தேடல் தொழில்நுட்பத்துடன் Drive அம்சங்கள் இயங்குகின்றன, இது சரியான உள்ளடக்கத்தை விரைவாகவும் துல்லியமாகவும் கண்டறிய உங்கள் குழுவிற்கு உதவுகிறது.

முன்னுரிமை

Priority அம்சமானது ஆர்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸைப் பயன்படுத்தி நீங்கள் தேடுவதைக் கணித்து அதற்கு மிகவும் பொருத்தமான உள்ளடக்கத்தை தருணத்தில் வழங்குகிறது. இதன் மூலம் நீங்களும் உங்கள் குழுவும் 50% வரை வேகமாகக் கோப்புகளைக் கண்டறியலாம்.

கண்டறி

உள்ளடக்க உருவாக்கத்தை விரைவாகவும் சக்திவாய்ந்ததாகவும் Explore அம்சம் மாற்றுகிறது, இது உங்கள் குழுவினர்கள் தரவைப் பற்றிய கேள்விகளைக் கேட்கவும், உங்கள் கோப்புகளில் பரிந்துரைக்கப்பட்ட உள்ளடக்கத்தை எளிதாகக் கண்டறிந்து சேர்க்கவும் உதவுகிறது.

பேனர்

கூடுதல் அம்சங்கள்

ஐகான்

இயக்கக நேரடி ஒத்திசைவு

டிஸ்க்கின் சேமிப்பிடம் & நெட்வொர்க் இணைய வேகத்தைப் பயன்படுத்தாமல் கிளவுடிலிருந்து நேரடியாக உங்கள் Mac/PCயில் Drive கோப்புகளை ஸ்ட்ரீம் செய்யலாம். நீங்களோ உங்களுடன் கூட்டுப்பணியாற்றுபவர்களோ செய்யும் மாற்றங்கள் அனைத்தும் தானாகவே புதுப்பிக்கப்பட்டு ஒத்திசைக்கப்படும், இதன் மூலம் நீங்கள் எப்போதும் சமீபத்திய பதிப்பைப் பயன்படுத்தலாம்.

ஐகான்

பகிர்ந்த இயக்ககங்கள்

பகிர்ந்த சேமிப்பிடத்தில் குழுக்கள் தங்கள் உள்ளடக்கத்தை எளிதாகச் சேமிக்கலாம் தேடலாம் அணுகலாம். பகிர்ந்த இயக்ககத்தில் உள்ள கோப்புகள் குழுவிற்குச் சொந்தமானவையே தவிர தனிநபருக்கு அல்ல, எனவே குழுவில் உள்ளவர்கள் அவர்கள் பணிபுரிய வேண்டிய கோப்புகளை எப்போதும் அணுகலாம்.

ஐகான்

தரவு இழப்புத் தடுப்பு (DLP)

பாதுகாக்க வேண்டிய உள்ளடக்கத்தை உங்கள் குழுவைச் சாராதவர்களுடன் பகிர்வதிலிருந்து குழு உறுப்பினர்களைத் தடுக்கலாம். அதிமுக்கியத் தகவலுக்காகக் கோப்புகளை Drive மூலம் ஸ்கேன் செய்து உங்கள் நிறுவனத்தைச் சாராதவர்கள் கோப்பினை அணுகுவதிலிருந்து தடுக்கலாம்.

ஐகான்

ஆஃப்லைன் அணுகல்

உங்களிடம் இணைய இணைப்பு இல்லையென்றாலும் Docs, Sheets, Slides ஆகியவற்றில் கோப்புகளை உருவாக்கலாம் பார்க்கலாம் திருத்தலாம். ஆஃப்லைனில் நீங்கள் செய்யும் மாற்றங்கள் இணைய இணைப்பு கிடைத்தவுடன் தானாக ஒத்திசைக்கப்படும்.

ஐகான் ஐகான்

தொடங்குங்கள்

ஐகான்

தனிநபர்கள்

மொபைல், டேப்லெட், கம்ப்யூட்டர் என எதிலிருந்தும் ஃபைல்களையும் ஃபோல்டர்களையும் சேமிக்கலாம் பகிரலாம் அணுகலாம். உங்கள் சேமிப்பகத்தில் 15 ஜி.பை. வரை இலவசம்.

ஐகான்

குழுக்கள்

கோப்புகளை நீங்கள் சேமிப்பதையும் பகிர்வதையும் அணுகுவதையும் எளிமையாக்கும் கிளவுட் சார்ந்த பாதுகாப்பான கூட்டுப்பணி பிளாட்ஃபார்ம் மூலம் உங்கள் குழு வேகமாகப் பணியாற்ற உதவுங்கள்.

ஐகான்

நிறுவனம்

தரவு இழப்புத் தடுப்பு, மின்வழிக் கண்டுபிடிப்புக்கும் காப்பிடுவதற்குமான Vault, பாதுகாப்பு மையம் ஆகியவற்றின் மூலம் நிறுவனத்தின் தரவைப் பாதுகாத்துப் பத்திரப்படுத்தலாம்.

ஆதாரங்கள்